அமரர் திருமதி.சிவசம்பு மகேந்திரா அவர்களின் நினைவாக நீர்க்குழாய்த் தொகுதி அன்பளிப்பு!

அண்மையில் அமரத்துவம் அடைந்த இணுவில் தெற்கைச் சேர்ந்த அமரர் திருமதி.சிவசம்பு மகேந்திரா ( வவாக்கா) அவர்களின் நினைவாக அன்னாரின் பிள்ளைகளால் இணுவில் ஆரம்ப மருத்துவ பராமரிப்புப் பிரிவில் அங்கு வரும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள், இணுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் பணிமனை உத்தியோகத்தர்கள், ஆரம்ப மருத்துவ பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர்கள், ஊழியர்கள் ஆகியோர் பயன்பெறும் வண்ணம்  நீர்க்குழாய்கள் அடங்கிய தொகுதி ஒன்று கட்டிக் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று நடைபெற்ற இந் நிகழ்வில் அன்னாரின் பிள்ளைகள், பேராசிரியர் க.தேவராஜா, இணுவில் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி திருமதி கலாரதி நடராஜன் மற்றும் இணுவில் பகுதிக்கான சுகாதார பரிசோதகர் திரு.கஜேந்திரன் மற்றும்  ஆரம்ப சுகாதார வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து நீர்க்குழாய்த் தொகுதியைத் திறந்து வைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!