இணுவிலில் சிறுவர் கண்காட்சி!
இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் கண்காட்சி சித்திரை 27, 28 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மையத்தில் நடைபெற இருக்கிறது.
இச் சிறுவர் கண்காட்சிக்கு திரு.ச.கிருபானந்தன் (உதவிக் கல்விப்பணிப்பாளர், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு வலயக் கல்வி அலுவலகம், வலிகாமம்) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.
அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறார்களின் கண்காட்சியினை சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றார்கள்.