இணுவில் செய்திகள்

இணுவிலில் திருக்குறள் போட்டியும் கலை நிகழ்வும் – அனைத்து சிறார்களும் கலந்து சிறப்பியுங்கள்.!

முழுநிலா நாள் சிறுவர் அரங்கு கலை நிகழ்வும் திருக்குறள் போட்டியும்

சிறாரின் ஆளுமையை வளர்த்தெடுக்கும் நோக்கில், இணுவில் அறிவாலயத்தில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் முழுநிலா நாள் சிறுவர் அரங்கு கலை நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளது. எனவே தங்கள் பாடசாலை மாணவர்களையும் இதில் கலந்து கொண்டு, நிகழ்வுகளினை வழங்கி, பயன்பெறும் வகையில் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முழுநிலா நாள் சிறுவர் அரங்கு கலை நிகழ்வுகள்
காலம் : 05.04.2023 புதன் கிழமை
நேரம் : காலை 09.30 மணி
இடம் : இணுவில் அறிவாலயம்

மேற்படி நிகழ்வுகளில் பங்குபற்றி நிகழ்ச்சிகளை வழங்க விரும்பும் மாணவர்கள் விபரத்தை 0740741221 என்ற What’s App இலக்கத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் திருக்குறளில் மாதாந்தம் ஒவ்வோர் அதிகாரம் மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டியும் நடாத்தப்பட்டு, முழுநிலா நாளன்று பரிசில்கள் வழங்கப்படும். இப்போட்டியிலும் மாணவர்களை பங்குபெற ஊக்குவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

• திருக்குறள் போட்டி : முதலாம் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
• போட்டி இடம்பெறும் தினம் : 01.04.2023 சனிக்கிழமை
• நேரம் : பி.ப 02.30 மணி
• இடம் : இணுவில் அறிவாலயம்
• திருக்குறள் போட்டிக்கான விண்ணப்பக் கட்டணம் : 200 ரூபா
• வயதுப்பிரிவு : 6 வயது வரை (தரம் 1 மற்றும் முன்பள்ளி மாணவர்கள்)
• விண்ணப்பிக்கும் முறை : போட்டி இடம்பெறும் வேளையில் விண்ணப்பத்தைப் பெற்று பூரணப்படுத்தி வழங்கினால் போதுமானது.
• பரிசில் வழங்கல் : பிழையின்றிச் சரிவர ஒப்புவிக்கும் அனைத்துச் சிறாருக்கும் முழுநிலா நாளன்று பரிசில்கள் வழங்கப்படும். பங்கு பற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?