இணுவிலில் நடந்த திருக்குறள் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட சிறார்கள்!
இணுவில் அறிவாலயத்தில் பாலர் வகுப்பில் இருந்து தரம்-04 மட்டும் திருக்குறள் (அதிகாரம்-02) மனன போட்டி ஏப்ரல்-29 அன்று அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நடுவர்களாக அறிவாலயத்தின் உபதலைவர் ஆசிரியர் யோ.சுதந்திரன், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி ஆசிரியர் தவசோதிநாதன், இராமநாதன் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் கமலாராணி கிருஷ்ணபிள்ளை, மற்றும் இலங்கை வங்கி உதவி முகாமையாளர் திருமதி சுகந்தி ஜெய்ச்சந்திரன் ஆகியோர் கடமையாற்றினர்.
போட்டியில் ஆர்வமாக 100 இற்கு மேற்பட்ட சிறார்கள் கலந்து கொண்டனர்.
திருக்குறள் போட்டிக்கான பரிசில் நிகழ்வும் முழுநிலா நாள் கலைநிகழ்வும் மே 05 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அறிவாலய மண்டபத்தில் நடைபெறும்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
திருக்குறள் போட்டியின் புகைப்படத் தொகுப்பு.
