கல்விக்கூடங்கள்

இணுவில் அமெரிக்க மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை

இலங்கையை அரசாண்ட கத்தோலிக்க மதத்தினர் யாழ் மண்ணில் கிராம மட்ட ஊர்களான வட்டுக்கோட்டை, மானிப்பாய், உடுவில் மற்றும் பல இடங்களில் தமது
மதத்தைப் பரப்பிப் பொதுச் சேவையான வைத்தியசாலை, கல்விச்சாலை மூலம் பாமர மக்களைக் கவர முன் வந்தனர். முதலில் வட்டுக்கோட்டையில் தலைமையகமாகக் கொண்டு பெரியதோர் கல்லூரியாக உடுவிலில் ஓர் பெண்கள் கல்லூரியை அமைத்தனர். தொடர்ந்து மானிப்பாயில் ஆண்களுக்கான மருத்துவமனையை அமைத்தனர்.

இணுவில் கிராமத்தின் சிறப்பை அறிந்து முதலில் பெண்களுக்கான மக்லியோட் வைத்தியசாலை என்னும் பெயரில் மருத்துவமனையை அமைத்தனர். இதே வளாகத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தையும் நிறுவி ஆரம்பக் கல்வியையும் தமிழில் புகட்ட முன் வந்தனர். பாமர மக்களைக் கவரும் வண்ணம் இப்போது மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலை அமைந்துள்ள இனிய புளிய மரங்கள் அடர்ந்த பெருநிலப் பரப்பிலே கிறிஸ்தவ மத ஆரம்ப பாடசாலையை 1903 இல் ஸ்ரான்லி டியூக் என்னும் பெயரில் நிறுவினர்.

இப்பாடசாலை அமெரிக்க மிசனறிமாரால் நிறுவப்பட்டதால் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை என்றும் இனிய புளிய மரங்கள் சூழ்ந்ததால் சீனிப் புளியடிப் பாடசாலையென்றும் வழங்கப்பட்டது. இங்கு தம் மதத்தைத் தழுவியவர்களையே கற்பிக்க ஏற்பாடு செய்தனர். இங்கு உடுவிலைச் சேர்ந்த திருமதி.
பத்தினிப்பிள்ளை சபாரத்தினம் என்பவரும் அவரின் மகளும் நெடுங்காலம் மாணவர்களின் மனங் கவரும் தாயுள்ளத்துடன் பிள்ளைகளை அனுசரித்து
அரும்பணியாற்றினர்.

1960இல் அனைத்துப் பாடசாலைகளும் அரசுடைமையாக்கப்பட்ட போது இப்பாடசாலையும் அரச பாடசாலையாகப் பொறுப்பேற்கப்பட்டது. அன்று தொட்டு இப்பாடசாலை தரம் ஒன்று தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆரம்ப பாடசாலையாகவே இருந்தது. அரசினர் பாடசாலையாக்கப்பட்ட பின் பாடசாலையில் சைவ சமயமும் பாடவிதானத்துக்கேற்ற இதர பாடங்களும் போதிக்கப்பட்டதால் மாணவர்வரவு கூடவும் கட்டடம் மற்றும் இதர
வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

ஏனைய பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு மாடிக் கட்டடம் அமைந்தபோதிலும் இப்பாடசாலையின் வடகீழ்த்திசையிலுள்ள பழைய கடட்டம் ஒன்று தனது பழமையை நிலைநிறுத்துகிறது. பிற்காலத்தில் இப் பாடசாலையும் சைவ மகாஜனா வித்தியாசாலையும் இணைத்து இணுவில் மத்திய கல்லூரி என்னும் நிறுவன ஆரம்பபாடசாலையாக இயங்கி வருகிறது.

இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களும்  பிள்ளைகளின் மனதைக் கவரும் பண்புடன் அரவணைத்து வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்ச்சையில் கூடுதலாகச் சித்தி பெற்று எமது திருவூருக்கும் இணுவில் மத்திய கல்லூரிக்கும் பெருமை சேர்க்கின்றனர்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?