இணுவில் செய்திகள்

இணுவில் அறிவாலயத்தில் புதிய நிர்வாக சபைத் தெரிவு!

இணுவில் அறிவாலயத்தின் நிர்வாக சபை கூட்டமும் புதிய உறுப்பினர்கள் தெரிவும் இன்று (12.03.2023) ஞாயிற்றுக்கிழமை இணுவில் அறிவாலய மண்டபத்தில் தலைவர் திரு.வைத்திலிங்கம் கனகநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாகசபையினைத் தெரிவு செய்திருந்தார். அறிவாலயத்தின் புதிய தலைவராக பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளர்,பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்கள் என ஆற்றலும், துடிப்பும் மிக்கவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

இணுவிலில் உள்ள அனைவரும் ஒன்றாக செயற்பட்டு அறிவாலயத்தினை உச்ச பயன்பாடு உள்ள இடமாக பயன்படுத்தல் வேண்டும் என்ற கருத்தினை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். முதலாவது செயற்திட்டமாக சிறுவர்களே நாட்டின் எதிர்கால சொத்து, அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுப்போம் என்ற எண்ணக்கருவுக்கு இணங்க மாதாந்தம் வரும் பெளர்ணமி தினத்தில் இணுவிலில் உள்ள சிறுவர்கள் அனைவரையும் பங்குபற்ற செய்து அவர்களுக்கான கல்விசம்பந்தமான போட்டிகள் வைப்பதற்கான முன்மொழிவும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அறிவாலய ஆயுட்கால உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?