இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி பூஜை விபரங்கள்!

முருகப்பெருமானின் கந்தசஷ்டி உற்சவம் நாளைய தினம் (05.11.2021) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் ஆலயத்தில் இந்த வருட கந்தசஷ்டி நிகழ்வுகள் மற்றும் பூஜைகள் சுகாதார நடைமுறைப்படி சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

இவ் கந்தசஷ்டி திருவிழா காலங்களில் இணுவில் கந்தசுவாமி கோவிலில் நடைபெறும் பூஜை விபரங்களை ஆலய தர்மகர்த்தா சபையினர் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் நாளை (05.11.2021) கந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்.

தினமும் காலை 4.30 மணிக்கு காலைப்பூஜை, காலை 5.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை அதனை தொடர்ந்து சண்முக அர்ச்சனை இடம்பெறும்.

அடுத்து காலை 7.30 மணிக்கு பூஜை அதனைத் தொடர்ந்து சண்முக அர்ச்சனை நடைபெறும்.

காலை 8.30 மணிக்கு அபிஷேகம் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பூஜை இடம்பெற்று காலை 10.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை அதனைத்தொடர்ந்து சண்முக அர்ச்சனை நடைபெறும்.

அடுத்து மாலை 2.30 மணிக்கு பூஜை தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு பூஜை இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து சண்முக அரச்சனை நடைபெற்று சுவாமி வீதிவலம் வரும்.

இறுதியாக மாலை 6.30 மணிக்கு  அர்த்தசாம பூஜை இடம்பெறும்.

10.11.2021 புதன்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு சூரன்போர் நடைபெறும்.

11.11.2021 வியாழக்கிழமை அன்று காலை 4.30 மணிக்கு அபிஷேகமும், தொடர்ந்து தீர்த்தோற்சவம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 04.00 மணிக்கு திருக்கல்யாணம் இடம்பெறும்.

12.11.2021 வெள்ளிக்கிழமை அன்று ஆறுபடைவீடு திருவிழா மாலை சுவாமி வீதியுலா வரும்.

07.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு தண்டாயுதபாணி அபிஷேகம்.

குறிப்பு:- அனைத்து அடியார்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

-இணுவில் கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தா சபை-

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!