இணுவில் செய்திகள்

இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூச உலகப்பெருமஞ்ச திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோயில் தைப்பூச உலகப் பெருமஞ்சத்திருவிழா எதிர்வரும் வியாழக்கிழமை 25.01.2024 அன்று சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

அன்றைய தினம் இணுவில், மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்திலிருந்து காலை 6.00 மணிக்கு பால்குடப்பவனி ஆரம்பமாக இருக்கின்றது.

பால், குடம் என்பன ஆலயத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால்குட நேர்த்தி செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய காரியாலயத்தில் 23.01.2024 செவ்வாய்க்கிழமைக்கு முன் முற்பதிவுகளை மேற்கொள்ளவும்.

அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மாபெரும் பொங்கல் விழா ஆரம்பமாகும். அடியவர்கள் பொங்கல் பொங்கி படையல் இடும் நிகழ்வு மதியம் 3.00 மணி வரை இடம்பெற இருக்கிறது .

தொலைவிலிருந்து வரும் அடியவர்கள் நலன் கருதி பொங்கலுக்குரிய அனைத்துப் பொருட்களும் ஆலயத்தினரால் விற்பனைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாலை 6.30 மணிக்கு நூற்றாண்டு பழைமை வாய்ந்த உலகப் பெருமஞ்சத்தில் ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வீதிவலம் வரும் நிகழ்வும், தமிழரின் பாரம்பரிய கலை, கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றது.

முருகன் அடியவர்கள் அனைவரும் வருகை தந்து பால்குடம் எடுத்தும் பொங்கல் பொங்கியும் வழிபாடு செய்து எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?