இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசம் – 2022
இணுவில் கந்தசுவாமி கோவில் வருடார்ந்த தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத் தினத்தினை முன்னிட்டு காலை இடம்பெற்ற பால்குடப் பவனி நிகழ்வு. இணுவில் பல்லப்ப வைரவர் கோவிலில் இருந்து இணுவைக்கந்தனுக்கு அடியார்கள் பால்குடம் எடுத்து வந்து ஆறுமுகப்பெருமானை பாலினால் குளிர்வித்தார்கள்.
அதன் முழுமையான காணொளி இது.
அதனைத் தொடர்ந்து தைப்பூசத் தினத்திலே இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு இணுவில் மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து காவடிகள் எம்பெருமான் ஆலயத்தினை நோக்கி வருகை தந்த போது.
அதன் முழுமையான காணொளி இது.
தைப்பூசத் தினத்தினை முன்னிட்டு தமிழர் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்ற வயலில் புதிர் எடுக்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொங்கலும்
சங்குவேலியில் இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான வயலில் இருந்து புதிர் அறுத்து வண்டில் மாட்டில் அதனை ஏற்றி இணுவைக்கந்தனுக்கு கொண்டு வந்து பூஜை செய்து நெல்லை உலர்த்தி உரலில் இடித்து அரிசியாக்கி பொங்கல் பொங்கி படைப்பார்கள்.
இவ் வழக்கம் ஒவ்வொரு தைப்பூசத் தினத்திற்கும் தொன்று தொட்டு காலம் காலமாக பாரம்பரியமாக இடம்பெற்று வரும் வழக்கமாகும்.
அவ்வாறு வயலில் இருந்து புதிர் அறுவடை செய்து எடுத்துவந்து பொங்கல் பொங்கும் நிகழ்வின் முழுமையான காணொளி தொகுப்பு இது.
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற உலகப்பெருமஞ்ச வீதியுலா.
தைப்பூசத் தினத்தன்று காலையில் இருந்து பால்குடப்பவனி, புதிர் எடுத்து பொங்கல் வைத்தல், காவடிகள் என பல நிகழ்வுகள் இடம்பெற்று மாலை உலகப்பெருமஞ்சத்தில் ஆறுமுகப்பெருமான் வீதியுலா வருவார்.
பல்லாயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஓசையுடன் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க தமிழர்களின் பறை இசையும் இசைக்க ஆறுமுகப்பெருமான் உலகப்பெருமஞ்சத்தில் வீதியுலா வரும் காட்சி மிக அழகாக இருக்கும். அதோடு சிலம்பாட்டம், மானாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், புலியாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், காவடிகள் என பல தமிழர் கலாச்சார நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.
அப்பிடி இடம்பெற்ற உலகப்பெருமஞ்சத் திருவிழாவின் முழுமையான காணொளித் தொகுப்பு
இவ்வாறு பல நிகழ்வுகளோடு உலகப்பெருமஞ்சத்திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.