நிகழ்வுகள்

இணுவில் பொதுநூலகத்தின் ஆண்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

இணுவில் பொது நூலகம் சன சமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் 09.04.2023 மாலை 3 மணிக்கு நூல் நிலைய கலாசார மண்டபத்தில் தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் திரு பொ.ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக பிரதி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர் அவர்களும் ஜே 188 இணுவில் மேற்கு கிராம சேவகர் திரு இ. ரமேஷ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கனடாவாழ் இ. சச்சிதானந்தம், ஜ. பரமேஸ்வரன், ஜ. திவாகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

அமரர் பொன்னையா கனகம்மா அவர்களின் அனுசரணையில் நடந்த இந்நிகழ்வில் வாழ்த்துரையினை புகழ் பூத்த ஆசிரியரும் நூல் நிலையத்தின் போசாகருமாகிய திரு இரா அருட்செல்வம் அவர்கள் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையும் விருந்தினர் உரைகளும் இடம் பெற்றது.

சமூக நலத்திட்ட வாழ்வாதார உதவி , புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் . தகவல் தொழில் நுட்ப மையத்தால் நடாத்தப்படும் ICT வகுப்பில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்திய துடுப்பாட்ட சுற்று போட்டிக்கான வெற்றி கேடயம் பணப்பரிசில்கள் என்பனவும் சதுரங்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் வெற்றி கேடயங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

39 கிரிக்கெட் அணிகள் பங்கு பற்றிய துடுப்பாட்ட சுற்று போட்டியில் இறுதிப் போட்டியில் ஸ்பேஸ் அணி மற்றும் பாபா அணிகள் மோதி ஸ்பேஸ் அணியானது வெற்றிக்கு கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

நிகழ்வில பிரதான அம்சமாக கனடா அமைப்புக் குழுவினருடைய வாழ்வாதார உதவியாக காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகின்ற வாழ்வாதாரமானது இன்று வழங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பரராஜ சேகரப் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையும் மற்றும் நலிவுற்ற குடும்பத்திற்காக வாழ்வாதாரமாக தையல் இயந்திரம் ஒன்றும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாணவர்கள் மற்றும் நூலக நலன் விரும்பிகள் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என்பவர்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?