இணுவில் செய்திகள்நிகழ்வுகள்

இணுவில் பொதுநூலகத்தின் வாழ்வாதார உதவிகள் வழங்கல்!

இணுவில் பொதுநூலகத்தின் கனடா அமைப்புக் குழுவினரின் நிதி அனுசரணையுடன் இணுவில் பொதுநூலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூகநலத் திட்டத்திற்கு அமைய வாழ்வாதார, கல்விக்கான ஊக்குவிப்புத் திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (12.11.2022) முற்பகல்-11 மணியளவில் இணுவில் பொதுநூலக கலாசார மண்டப முன்றலில் பொது நூலகத் தலைவர் சி.புரந்திரா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கான பல்வேறு வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இணுவில் பொதுநூலகப் போசகர் இரா.அருட்செல்வம் ஆசிரியரின் வாழ்த்துரை இடம்பெற்றதைத் தொடர்ந்து பயனாளிகளுக்குத் தையல் இயந்திரம், கோழி வளர்ப்பதற்கான உதவி உள்ளிட்ட வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பயனாளிகள், இணுவில் பொதுநூலக அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதே வேளை, மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மேற்படி செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?