இணுவில் பொதுநூலக Junior Smart Center சிறார்களின் ஆங்கில தின நிகழ்வு!
இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய (JUNIOR SMART CENTER) மாணவர்களது வருடாந்த ஆங்கில தின நிகழ்வானது 29. 01.2023 பிற்பகல் 3.00 மணியளவில் இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் தலைவர் திரு.S.புரந்தரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.S.சுரேஷ்குமார் மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆங்கில மொழிக்கான ஆசிரிய வளவாளர் வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.T. ராஜ்குமார் தலைவர் வர்த்தகம் மற்றும் மொழிகள், தொழில்நுட்பவியல் கல்லூரி யாழ்ப்பாணம், திருமதி.கம்சானந்தி பிரபாகரன் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, செல்வி.K. சூரியகுமாரி ஓய்வு பெற்ற ஆங்கில வளவாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நூலக தலைவர் திரு .S. புரந்திரா தலைமையுரையாற்றியதனை தொடர்ந்து தொடக்கவுரையினை A.T.C கல்வி நிலைய நிர்வாக இயக்குனரும், பொது நூலகப் போசகருமாகிய திரு.இரா.அருட்செல்வம் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.
மாணவர்களது ஆங்கில மொழியிலான பேச்சு, பாடல்கள், குழு நடனம் போன்ற சிறப்பான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் தரம் ஒன்றுக்காக செல்லும் மாணவர்களது பட்டமளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கான அனுசரணை A.T.C 85 கரங்கள் குழுவினர் வழங்கியிருந்தனர்.
முழுமையான காணொளித் தொகுப்பு