இணுவில் வாழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் கொரோனா தடுப்பூசி!
நாடு பூராகவும் 30 – 60 வயதிற்கு இடைப்பட்ட மக்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இணுவிலில் வசிக்கும் 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு நாளை (15.12.2021) புதன்கிழமை மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இவர்களுக்கு கடந்த ஆவணி மாதம் ஆரம்பத்தில் முதலாவது தடுப்பூசியும் அடுத்த ஆவணி மாதம் இறுதி மற்றும் புரட்டாதி மாதம் ஆரம்பத்தில் இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டிருக்கின்றது. முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளாக சீனாவின் சினோபோம் தடுப்பூசியானது வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக ஜேர்மனி மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தயாரிப்பான பைசர் தடுப்பூசியானது வழங்கப்பட இருக்கின்றது.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்தவர்களுக்கு மாத்திரமே இவ் மூன்றாவது தடுப்பூசியானது வழங்கப்பட இருக்கின்றது.
இவ் தடுப்பூசியானது இணுவில் அறிவாலயத்தில் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மதியம் 02.00 மணி வரை வழங்கப்பட இருக்கின்றது.
இணுவில் கிராம சேவையாளர் பிரிவுகளான யா/188 , யா/189 , யா/190 , யா/191 ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 30 வயதிற்கும் 60 வயதிற்கு இடைப்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் தவறாது கலந்து கொண்டு உங்களுக்கான மூன்றாவது தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இணுவில் மக்களுக்கு புதன்கிழமை ஒருநாள் மாத்திரம் இணுவில் அறிவாலயத்தில் தடுப்பூசி வழங்கப்படுவதனால் இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.