இணுவில் செய்திகள்

லம்போதரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி!

இணுவில் பொது நூலக ஆண்டு விழாவினை முன்னிட்டு லம்போதரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி இணுவிலில் நடைபெற இருக்கின்றது.

முதல் வெற்றியாளருக்கு 50000 ரூபா பணப்பரிசிலும், இரண்டாவது வெற்றியாளருக்கு 30000 ரூபா பணப்பரிசிலும் அவற்றை விட மேலும் பல பணப்பரிசிகள் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட இருக்கின்றது.

போட்டிகள் வெகு விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட அணிகளுக்கே வாய்ப்பு வழங்கப்பட இருப்பதினால் விளையாட ஆர்வமுள்ள அணியினர் தங்களது அணியினை 03/03/2023 முன்னரே பதிவு செய்து பங்குபற்றலை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நுழைவுக் கட்டணம் 2500 ரூபாய்கள். போட்டித்தொடரில் பங்குபெற விரும்பும் அணிகள் இலகுவாக முற்பதிவு செய்திட கீழே இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் உங்கள் பதிவுத்தொகையை வைப்பில் இட்டு அவர்களுக்கு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கணக்கு இலக்கம் : 112061003185
Inuvil public library and community center
Sambath Bank
Jaffna branch.

மேலதிக தொடர்புகளுக்கு : 0774116987, 0766933135, 021 224 1930

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?