இணுவில் செய்திகள்

Dr.ரகுபதியின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளில் நடைபெறவுள்ள நிகழ்வுகள்!

மறைந்த பொது வைத்திய நிபுணர் Dr.ரகுபதியின் 3 ஆம் ஆண்டு நினைவாக இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் 11.12.2021 அன்று சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இணுவில் அறிவாலயத்தில் நடைபெற இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து ரகுபதி அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் கற்பவதிகளுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் வழங்குதலும் இடம்பெறவுள்ளது. அதனோடு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதிகளின் கட்டில்களுக்கான படுக்கை விரிப்புகள் வழங்கும் நிகழ்வும் இடம் பெறும்.

வரும் சனிக்கிழமை ( 11.12.2021 ) அன்று காலை 8.30 மணிக்கு இணுவில் அறிவாலயத்திற்கு நலன்விரும்பிகள் , ஊர்மக்கள் அனைவரும் வந்து நிகழ்வில் கலந்து கொண்டு உயிர் காக்கும் இரத்ததானத்தையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அனைவரும் வருக!
ஆதரவு தருக!

அனுசரணை
Dr.ரகுபதி அறக்கட்டளை

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?